தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று (05.03.2017) நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு கைல்புறோன் Nürnberg வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.00மணிக்கு தொடங்கி 12.00மணி வரை நடைபெற்றது. இதில் மிகக்குறைந்த மக்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் பலர் மாமனிதர் திரு. சாந்தன் பற்றிய கவிதைகளும், சிறப்புரைகளும் ஆற்றினார்கள். அத்துடன் மாமனிதர் திரு. சாந்தன் அவர்கள் பாடிய சில புரச்சிப்பாடல்களையும் உள்ளுர் பாடகர்கள் பாடி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.1 .3 .2017 அன்று டோர்ட்முண்ட் நகரிலும் மற்றும் ஏனைய நகரங்களிலும் மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு வணக்க நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

Top