தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதை இனியும் அனுமதிக்க முடியாது: கஜேந்திரகுமார்

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதை கடுமையாக எதிர்த்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதை இனியும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவது தொடர்பாக, கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலார்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாதென தெரிவித்து ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ளபோதும், கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பின் தலைமை ஆதரவு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதென கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கால அவகாசம் வழங்கக்கூடாதென்ற நிலைப்பாட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அதன் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top