ஜெயலலிதாவின் வீட்டிற்கு மீண்டும் தீவிர பொலிஸ் பாதுகாப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேனாம்பேட்டை உதவி பொலிஸ் ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் அண்ணனின் மகள் தீபாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட போவதாக வெளியான தகவலை அடுத்தே குறித்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜெயலலிதாவின் அண்ணனின் மகன் தீபக்கும் இன்று போயஸ் தோட்டத்திற்கு செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த பாதுகாப்பு முன்னெடுக்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Top