மக்களது காணிகளை பறித்து ராணுவத்திற்கு கொடுப்பதை அரசு நிறுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை பறித்து ராணுவத்தினருக்கு கொடுப்பதை அரசாங்கம் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு வாழும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று தசாப்த காலமாக காணி உறுதி அற்ற நிலையில் வாழ்ந்துவரும் கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், இன்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டிருந்த கஜேந்திரகுமார் அதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

பன்னங்கண்டி கிராம காணியானது, முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதிபிள்ளைக்குச் சொந்தமானதால், அவருடன் பேசி அக் காணியை மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கஜேந்திரகுமார் இம் மக்களிடம் தெரிவித்தார்.

அல்லது அரசாங்கம் அக் காணியை பெற்று மக்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு அதற்கான நட்டஈட்டை சிவா பசுபதிப்பிள்ளைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அதற்கு சிவா பசுபதிப்பிள்ளை உடன்படாவிட்டால் இம் மக்களுக்கான மாற்று நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்தே ஆகவேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Related posts

Top