முள்ளிவாய்க்காலில் காணாமல்போன எனது மகன் எங்கே?

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வுகளற்ற நிலையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள், கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுத்துள்ள போராட்டம் கவனிப்பாரற்ற நிலையில் இன்று பதினைந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது மகன் எங்கே என்று மகனை இழந்த தாய் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை இறுதி யுத்தத்தின்போது தவறவிடப்பட்ட சுந்தரலிங்கம் அருணன் என்ற மகன் காணாமல் போயுள்ளதாக கவலை வெளியிட்ட தாயார், யுத்தம் நிவைடைந்தபோது தனது மகன் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் பிரவேசித்த நிலையில் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டார்.

Top