வடக்கு முதல்வருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், நல்லிணக்க விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புக் குறித்து கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், முதலமைச்சர் விக்னேஸ்வரன் முழுமையாக மீண்டு வரவும், உடல்நலம் பெறவும் வாழ்த்தியதாகவும், சிறிலங்காவின் நல்லிணக்கம் தொடர்பாக அவரது கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உடல்நலக் குறைவினால், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top