சிறீலங்கா கடற்படை அப்பாவி தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் சிட்சோ என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடலோர எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. துப்பாக்கி சூடு நடத்துவது மட்டுமல்லாமல் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களது நாட்டிற்கு எடுத்துச் செல்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 300 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனிடையே இந்திய கடல் எல்லையான ஆதம்பாலம் என்ற பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்கள கடற்படை சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சிட்சோ(22) என்ற மீனவருக்கு கழுத்தில் குண்டு பாய்ந்தது. கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கரைக்குத் திரும்பிய போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

Top