வவுனியாவில் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

தூங்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மகாறம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா 9ம் ஒழுங்கை, பிரதான வீதி மகாறம்பை குளம் பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ரமணி(60)என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு மகளுடன் சிற்றுண்டி உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.

இதேவேளை இறந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிசார் சேர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Top