கிளிநொச்சியில் 17 ஆவது நாளாக தொடரும் காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டம்: முல்லையிலும் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்கிறது. காணாமல்போக செய்யப்பட்ட தமது உறவுகளின் விடுதலையையும் அவர்கள் பற்றிய விபரங்களையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டம் :கிளிநொச்சி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வெண்டும் எனவும், கால தாமதமின்றி தீர்வு வேண்டும் இல்லையேல் சர்வதேச குற்றவியல் நிதீமன்றிற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை கொண்டு செல்லப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் :முல்லைத்தீவு

Related posts

Top