நயினாதீவு கடற்பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர், கடலில் பொதியொன்று மிதந்து வருவதை கண்டநிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதனுள் கேரள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் நீர் சுமையுடன் கைப்பற்றப்பட்ட சுமார் 52 கிலோ கிராம் கஞ்சாவை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக போலீசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top