வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒப்பாரி போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில், ஒப்பாரி போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெற்ற இவ் ஒப்பாரி போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதன்போது மூன்று தாய்மார் மயக்கமுற்று விழுந்தனர். இவ் ஒப்பாரி போராட்டத்தின் இறுதியில் தயாகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இதுவரை தமக்கு சாதகமான பதிலெதுவும் கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Top