திருகோணமலையில் மீனவர்களின் வலையில் சிக்கிய டொல்பின்கள்

திருகோணமலை உட்துறைமுக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களது வலையில் டொல்பின் மீன்கள் பிடிபட்டது.

திருகோணமலை உட்துறைமுக பகுதியில் உள்ள கடற்பரப்பில் கரவலை வளைத்தவர்களது வலையில் 12 டொல்பின் மீன்கள் அகப்பட்டது. இச்சம்பவம் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்றது.

வலையில் அகப்பட்ட மீன்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் காப்பாற்றுவதாக அங்கே நின்றுகொண்டிருந்தவர்களுக்கு பாவனைசெய்த மீனவர்கள் அவற்றில் ஒன்பது மீன்களை ஒரு கயிற்றினால் கட்டி கடலினுள்விட்டுவிட்டு அவர்களது மற்றைய வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

தகவலறிந்து ஸ்தலத்திற்கு வருகைதந்த திருகோணமலை தலைமையகப் பொலிஸ்பிரிவினர் உயிரழந்த நிலையில் கட்டப்பட்டு கடலினுள் இருந்த ஒன்பது டொல்பின்மீன்களையும் மீட்டதுடன் குறித்த மீன்பிடியில் ஈடுபட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

Top