ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி:சசிகலா அணியினர் டெபாசிட் இழப்பது உறுதி :தீபா

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி -என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. சசிகலாவுடன் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லை. அழைப்பு விடுத்தாலும் ஏற்கமாட்டேன். ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட எந்த தயக்கமும் இல்லை. இணைந்து செயல்படவேண்டும் என்றால் அவர்கள் தான் முன்வர வேண்டும். சசிகலா மற்றும திமுகவை தவிர பிறர் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன். யாருடன் ஆதரவு கோரவில்லை,ஆதரவு அளித்தால் புறக்கணிக்க மாட்டேன்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைக்கு ஆதரவு தருவார்கள். ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை ஆர்.கே.நகர் மக்கள் முடிவு செய்வார்கள். எனக்கும் கணவருக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நிர்வாக பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். ஆர்.கே.நகர் சுற்றுப்பயண திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த அறிக்கை ஏற்புடையதாக இல்லை. மருத்துவ அறிக்கையின் மூலம் எந்த உண்மையும் வெளிவரவில்லை. அப்பல்லோவிடம் கேள்வி எழுப்பலாம் என முடிவு செய்துள்ளேன். சசிகலா தலைமையிலான அணியை தான் பிரதானமாக எதிர்ப்பேன். சசிகலா அணியினர் டெபாசிட் இழப்பது உறுதி. சசிகலா அணியுடன் எந்த காலத்திலும் இணைந்து செயல்பட மாட்டேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைக்கு ஆதரவு தருவார்கள். மக்கள் ஆதரவு அளித்து வெற்றியை ஏற்படுத்தி தருவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Top