வேலையற்ற பட்டதாரிகளால் வட. மாகாணசபை முற்றுகை

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக முன்னெடுத்து வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) வடக்கு மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வடக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வுகள் இடம்பெற்றற நிலையில், தமது கோரிக்கை குறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து வடக்கு மாகாண சபைக்கு மகஜர் கையளிக்கப்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்துரையாடினர். இதன்போது, எதிர்வரும் 13ஆம் திகதி வடக்கு ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

எனினும், கடந்த 11 நாட்களாக முன்னெடுத்து வந்த போராட்டத்தை யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் முற்றுகை போராட்டம் காரணமாக, இன்றைய தினம் வடக்கு மாகாண சபை அமர்வுகள் இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமாகியே ஆரம்பமாகின.

Related posts

Top