கால அவகாசம் வழங்க உறுப்பு நாடுகள் இணக்கம்! – சிறீலங்கா அரசாங்கம்

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை சிறீலங்காவுக்கு வழங்குவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணங்கியுள்ளதாக சிறீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்தது வெறும் அறிக்கை மாத்திரமே என்றும், அது ஒரு நாட்டின் இறைமையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதெனவும் ஹர்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெனீவாவில் நடைபெற்ற உறுப்பு நாடுகளின் முறைசாரா கலந்துரையாடலில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை பயன்படுத்தி சிலர் மக்களை தவறான திசைக்கு இட்டுச்செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top