ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 177 தமிழர்கள் கைது!

கடப்பா அருகே உள்ள லங்கமலா வனப்பகுதியில் நேற்றிரவு சிலர் செம்மரம் வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து மேற்கொண்ட வனத்துறையினர் 15 தமிழர்கள் உட்பட 16 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அடர்ந்த காட்டுபகுதியில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது செம்மரம் கடத்தியதாக 177 தமிழர்கள் உட்பட 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் புதியதாக இயற்றப்பட்டுள்ள வனச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் கை ரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Related posts

Top