சிறீலங்கா தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை வரவேற்கதக்கது: கொள்கை மறந்த இமெனுவல்

சிறீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, வெளியிட்ட அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின், மனித உரிமை பொறிமுறை தொடர்பில் சிறீலங்காவின் ஆக்கபூர்வமான தொடர்பு, அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ள எடுத்து வரும் முயற்சிகள் போன்றன வரவேற்கப்பட வேண்டியவை என உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

எனினும், கால மாறு நீதிப்பொறிமுறைமை வருத்தப்படுமளவிற்கு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் காலமாறு நீதிப் பொறிமுறைமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்தின் தரப்புக்கள் ஒரே விதமான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனாலும், சிறீலங்காவை ஐக்கிய நாடுகள் அமைப்பு, தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

Top