சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை-ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு(2 ஆம் இணைப்பு )

சிறீலங்கா அரசுக்கு 2 வருடங்கள் காலவகாசம் வழங்குவதற்கு த.தே.கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுபினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று அது தொடர்பில் கலந்தாலோசனை செய்வதற்கு அவசர கூட்டம் ஒன்றை சம்பந்தன் கூட்டியிருந்தார்.

கூட்டத்தில் பலவிதமான கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தரப்பு சிறீலங்காவுக்கு 2 வருடகாலவகாசம் வழங்குவதில் உறுதியாக இருந்துள்ளனர்.இதனை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் பல உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் சிறீலங்கா அரசுக்கு 2 வருடகாலம் அவகாசம் வழங்குவதாக எடுக்கப்பட்ட முடிவில் மாற்றமில்லை என்று சிங்கக்கொடி சம்பந்தனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான த.தே.கூட்டமைப்பின் ஊடக அறிக்கை வருமாறு

இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையால் 2015 ஐப்பசி 1ம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஆணைக்குழவின் 30/1 தீர்மானத்தின் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.

இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐ.நா மனித உரிமைகள் ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி மேற்பார்வை செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறையின் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும்வண்ணமாக சர்வதேசப் பொறிமுறைகளை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதிசெய்ய வேண்டும்,

மேற்படி தீர்மானங்களுக்கு ஈபிஆர் எல் எப் இணங்கவில்லை என கௌரவ நடேசு சிவசக்தி (பா.உ) தெரிவித்தார்.

Related posts

Top