கூட்டமைப்பின் வவுனியா கூட்டம் மக்களை ஏமாற்றும் செயல்-ஆனந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில் எமக்கு உடன்பாடில்லை எனவும் இன்று நடத்தப்பட்டக் கூட்டம் வெறும் கண்துடைப்பே எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றை தினம் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்று கூடி ஐ.நா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயம் தொடர்பாக ஆராய்ந்தோம்.

இந்த மனித உரிமை பேரவையிலே நடைபெறுகின்ற தீர்மானம் தொடர்பாக கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது குறித்து நீண்ட நேரம் பேசப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பெரும்பாலான நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.

இதற்கான காரணம் 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 18 மாத காலஅவகாசத்திற்குள் எந்தவித முடிவுகளையும் அரசாங்கம் அமுல்படுத்த வில்லை. எனினும் கடும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. எங்களது கட்சிக்கு இதில் உடன்பாடில்லை” என அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

Related posts

Top