வவுனியாவில் கடும் மழை-மக்கள் அவதி!

வவுனியாவில் பெய்து வரும் மழையினால் அப்பகுதி மக்கள் போக்குவரத்தினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வவுனியாவில் இன்று மதியம் 2.00 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

வவுனியா நகரம் , பட்டானீச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

Top