பிரபாகரனை சமூக வலைத்தளங்கள் இறைவனாக்கியுள்ளன: கோட்டாபய

சமூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறைவனாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக குரல் கொடுக்க சமூக வலைத்தளங்களில் யாரும் முன்வருவது இல்லை எனவும் தன்னையும், மஹிந்த ராஜபக்‌ஷவையும், படையினரையும் கள்வர்கள், கொலைகாரர்கள் என்று சித்தரித்து பிரசாரம் செய்யவே முன்வருகின்றனர் எனவும் கோட்டாபய மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருப்பதாகவும் யுத்தக் குற்றம் தொடர்பில் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் கோட்டாபய இதன்போது கூறியுள்ளார்.

Related posts

Top