காலநீடிப்பு வேண்டாம் -வடமாகாணசபையினில் தீர்மானம்!

இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளைக் கோரியுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினில் இலங்கை அரசிற்கு காலநீடிப்பு வழங்குவதை நிராகரித்துள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய அமர்வில் இலங்கை அரசாங்கத்துக்கான தீர்மானத்தைூ முழுமையாக அமுல்படுத்த அங்கத்துவ நாடுகளை கோரும் தீர்மானம் வடமாகாண சபையினில் பெரும்பான்மை ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்தினில் ஜெனீவாவில் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” எனத் தலைப்பிடப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமானது அனுசரணை வழங்கி ஒப்பமிட்டதுடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களையும் சர்வதேச மனித நேயப்பண்புகளின் மீறல்களையும் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென பன்னாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்தக் கூடியவாறான நடுநிலைமை தவறாத நீதிப் பொறிமுறை ஒன்றை ஒழுங்கு செய்வதற்கு உறுதியளித்தமையையும் நினைவுகூர்ந்து கொண்டு,இலங்கை அரசாங்கமானது இதுவரை குறித்த பொறிமுறையில் பன்னாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த வேண்டிய அதன் கடப்பாட்டிலிருந்து விலகியுள்ளதுடன், நடுநிலைமை தவறாத நம்பிக்கைப் பொறிமுறை ஒன்றைத் தோற்றுவிப்பதற்கான எந்தவொரு பயன்மிக்க நகர்வுகளையும் மேற்கொள்ளவுமில்லை என்பதைக் கருத்திற் கொள்வதுடன்,
பன்னாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிராத எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையிலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் எந்தவொரு நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டு,

இலங்கையின் வட மாகாண சபையானது பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றுகின்றது:

1. 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இணையனுசரணை வழங்கப்பட்ட, விசேடமாக பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, அடக்குமுறை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான நில ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் இடம்பெறாமை, இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான தீர்மானம் 30-1 ஐ இலங்கை அரசாங்கமானது முழுமையாக அமுல்படுத்துதல் வேண்டும்.

2. இலங்கை அரசாங்கமானது ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்துள்ளதும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உறுதியளித்துள்ளதுமான அதனுடைய பொறுப்புக்கூறல் செயன்முறையில் பன்னாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்குத் தொடுநர்கள்; மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துதல் வேண்டும்.

3. இலங்கையால் அதனுடைய சொந்தக் கடப்பாட்டை அமுல்படுத்த முடியாத அல்லது விரும்பாத பட்சத்தில், ,வ்விடயத்தை சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு உட்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேச சமூகத்திடமும் இச்சபையானது கோருகின்றது.

4. உண்மை, நீதி மற்றும் சமத்துவமானதுமான அரசியல் தீர்வின்றி, இலங்கையில் நல்லிணக்கமோ அல்லது நிலையான சமாதானமோ சாத்தியமற்றது என இச்சபை கருதுகின்றது.

5. இச்சபையானது ,லங்கையிடம் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்குமாறும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்துக்குரிய ,லங்கை மீதான விசாரணை அறிக்கையின் மூலம் பரிந்துகை;கப்பட்டுள்ளதற்கு அமைவாக உரோம நியதிச்சட்டத்தை ஏற்புறுதி செய்யுமாறும், தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் கூடியதோர் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருமாறும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசச் சமூகத்திடமும் கோருகின்றது.

6. தமிழ் மக்கள் இலங்கையின் இணைந்த வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அவர்களுடைய மரபுவழித் தாயகத்துக்கு உரித்துடைய ஓர் தேசிய இனம் என்பதையும், சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கமானது ஆகக்குறைந்தது இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட, முழுமையானதும் பூரணமானதுமான கூட்டாட்சி முறைமையை அளித்து அதனை அரசியலமைப்பில் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி அங்கீகரிக்கின்றதுமான நடுநிலைமையானதோர் அரசியல் தீர்வை வழங்குதல் வேண்டும்.

7. இச்சபையானது அரசியல் தீர்வின் பொருட்டு இலங்கை அரசியலமைப்புச்சபைக்கு ஒரு தொகுதி முன்மொழிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதென்ற தீர்மானமே பெரும்பான்மையின ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

Top