காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு இன்றுவரை தீா்வில்லை

வவுனியாவில் தொடர்ந்தும் 19 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இறுதிப்போரின்போது படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கடும் மழையிலும் இரவு பகலாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், அரசாங்க தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இதுவரை கிடைக்காமை, தம்மை மேலும் வேதனையடைய வைத்துள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Top