ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிந்துரைகளை அமுல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் – சிறீலங்கா அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரைகளை அமுல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என சிறீலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் சிறீலங்காவுடன் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் இன்றைய தினமும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிறீலங்கா ஆகியனவற்றின் கூட்டு ஆணைக்குழு அமர்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த அமர்வுகளின் பின்னரே குறித்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Top