எனது பிள்ளைகளை இராணுவமே கடத்திச் சென்றது

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகள் குறித்து தீர்க்கமான முடிவை வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுழற்றி முறையிலான உணவுத்தவிர்ப்புடன் கூடியதாக இடம்பெற்றுவரும் கவனயீர்ப்பு போராட்டம் எதுவித முடிவுகளும் அற்ற நிலையில் இன்று 19 ஆவது நாளை எட்டியுள்ளது.

நாட்டில் நிலவிய யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் பலவந்தமாக கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள் குறித்து உரிய தீர்வை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்றையதினமும் நேரில் சென்று சந்தித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு கடத்திச் செல்லப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட தனது மகன்மார் மற்றும் பேரப்பிள்ளைக்கு என்ன நடந்தது என்று வயதான தாயார் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Top