வளர்ப்புத்தாயினால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட 4வயதுச் சிறுவன்!

மட்டக்களப்பு மாவட்டம் நாவற்குடா பிரதேசத்தில் மாதர் வீதியில் வசித்துவந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அவரது வளர்ப்புத் தயாரால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தையடுத்து குறித்த சிறுவனின் வளர்ப்புத் தாயாரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

50 வயதையுடைய குறித்த வளர்ப்புத் தாய் நூலகம் ஒன்றில் பணியாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Top