முன்னாள் பெண் போராளி உட்பட மூவர் கைது!

வெள்ளவாய, கொடவெஹரகள பிரதேசத்தில் முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அப்பிரதேசத்திற்குச் சென்றவேளையிலேயே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் கொடவெஹரகள பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த நபர் 35 வயதுடையவர் எனவும், இவர் விடுதலைப்புலிகளின் காவல்துறையில் 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டுவரை செயற்பட்டதாகவும், பின்னர் 2009ஆம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை புனர்வாழ்வுபெற்று விடுதலையானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் அந்த பகுதிக்கு சென்ற காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

Top