நாளை வாக்குமூலம் அளிக்கிறார் மஹிந்த..!

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு,சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், விளம்பரங்களை காட்சிப்படுத்தியமை, தேர்தல் காலத்தில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் நஸ்டம் குறித்த விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிக்கவே அவரை அளித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் நட்டு மக்களின் வரிப்பணத்தை தேர்தல் விளம்பரத்திற்காக பயன்படுத்தியமை தொடர்பில், நாளை காலை 10.00 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top