தமிழ் கூட்டமைப்பு , வட மாகாண சபையின் தீர்மானங்களை கண்டு கொள்ளமாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வடக்கு மாகாண சபையோ எத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அது தொடர்பாக கண்டு கொள்ள போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தையோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் இணங்க மாட்டோம் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பி பெரேராவே இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

Top