ஆரையம்பதி கீச்சான்பள்ளம் பகுதியில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கீச்சான்பள்ளம் எனும் கிராமத்தில் நான்கு கைக்குண்டுகள் இன்று (15.3.2017) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.மேற்படி கீச்சான்பள்ளம் கிராமத்தில் அப்துல் கரீம் என்பவருக்கு சொந்தமான காணியில் போட்டப்பட்டுள்ள வீட்டுக்கான அத்திபாரத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது இந்த கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து இது தொடர்பில் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடி பொலிசாரும் கோவில்குளம் பிரசேத்திலுள்ள இரானுவத்தினரும் ஸ்தளத்திற்கு சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் குறித்த கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர்.

நான்கு கைக்குண்டுகளும் சொப்பிங் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

Top