இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் சோமாலிய படையினரால் முற்றுகை

எட்டு இலங்கையர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பல், சோமாலிய பாதுகாப்பு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் வகையில் சோமாலிய படையினர் விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையிலேயே தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீட்பு முயற்சியின் போது சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும், படையினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

Top