நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னெடுப்புகளின் நிலவரம் என்னும் கருப்பொருளில் இன்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ். நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ். நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் வரை இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை அரசு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் தருணத்தில் அதற்கான நீதியினை மனித உரிமை பேரவை வடக்கு, கிழக்கு மக்களான எமக்கு பெற்றுத்தரவேண்டும் என்று கோரி இவ் போராட்டம் இடம்பெற்றது.

Related posts

Top