இரட்டை இலை யாருக்கு?… சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது பற்றி மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சசிகலாவைப் பதில் தர உத்தரவிட்டுள்ளது அதிமுகவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் கடுமையாக சிதற வாய்ப்புள்ளது. அதிமுகவின் சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ் அணி சார்பில் தொகுதிக்குள் நன்கு பரிட்சயமான மதுசூதனனும், அதுமட்டுமல்லாமல் தீபா களமிறங்குவதும் மும்முனை போட்டியை அதிமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு நடக்கும் இப்போட்டி இடைத்தேர்தல் களத்தை தகிக்க வைத்துள்ளது.

Related posts

Top