ஜெனீவா செல்பவர்கள் புகைப்படமெடுக்க செல்கின்றனர் – சுமந்திரன்!

ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை செய்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

தமிழ் மிரர் பத்திரிகையாசிரியர் ஏ.பி.மதனால் எழுதப்பட்ட நூல் வெளியிட்டு நிகழ்வினில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சார்பினில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.பிரதம விருந்தினராக இலங்கைப்பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் அரச அமைச்சர்கள் மனோகணேசன்,ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக ஊடகவியலாளர்களிடையே கருத்து வெளியிட்ட அவர் ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை செய்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்த அவர் இப்போது செல்பவர்கள் புகைப்படமெடுக்க செல்வதாக தெரிவித்தார்.
இதனிடையே மனோகணேசன் தனது ருவிட்டரில் தெரிவித்தது பொய்யெனவும் கூட்டமைப்பு வடகிழக்கு இணைப்பினை கைவிடவில்லையெனவும் ஒற்றையாட்சியினுள் தீர்வுக்கு சம்மதிக்கவில்லையெனவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

Top