இலங்கை தொடர்பான ஐ.நாவின் பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் அனுசரணை

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு, எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள நிலையில், இதுவரை இலங்கைக்கு 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியுள்ளன.

அந்தவகையில் அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்னேகுரோ, நோர்வே, மெஸடோனியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன. மேலும் இந்த பிரேரணையுடன் சம்பந்தப்பட்ட நாடான இலங்கையும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இதனால், இலங்கை தொடர்பான பிரேரணையானது வாக்கெடுப்பின்றி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கையில் ஊக்குவித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை, 2015ஆம் ஆண்டு பிரேணையை அமுல்படுத்த கால அவகாசமும் வழங்கியுள்ளது.

Related posts

Top