புலமைப்பரிசிலர் சிறப்பிப்பு – மு/கள்ளப்பாடு அ.த.க.பாடசாலை.

2016ஆம் ஆண்டின் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்வொன்று மு/கள்ளப்பாடு அ.த.க.பாடசாலையில் கடந்த 2017.03.16 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பாடசாலையின் கேட்போர்கூடத்தில் பாடசாலைமுதல்வர் திருவாளர் ந.கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
முல்லை வலயக்கோட்டக்கல்வி அதிகாரி திருவாளர் த. சிறி புஸ்பநாதன், முல்லை வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திருவாளர் சத்தியசீலன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் முதல்வர் திருவாளர் இரவீந்திரராசா, முல்லைத்தீவு மகா வித்தியாலய முதல்வர் திருவாளர் செபநேசன், முல்லை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ந.தசரதன் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தார்.

இப்பாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் இரண்டு மாணவர்கள் (நா கோபிகன் -151 புள்ளிகள், வி.திலக்சிகா -150 புள்ளிகள்) பெற்றுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை-2016இல் இப்பாடசாலை 74% சித்தியை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Top