யாழ் சிறையிலிருந்த இந்திய கைதி தப்பியோட்டம்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய வியாபாரியான கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த நபர் கடந்த மாதம் பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றையதினம் வயிற்றுவலி என சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்த போது, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட வேளையில், கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் கழிவறைக்கு சென்றவர் தப்பிச்சென்றுள்ளார்.

கழிவறைக்கு சென்றவரை நீண்ட நேரமாக காணவில்லை என தேடிய போதே தப்பிச் சென்றுவிட்டதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

தப்பிச் சென்ற கைதியை மீண்டும் கைது செய்வதற்காக தேடுதல் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Top