ஐ.நாவே! இலங்கைக்கு கால நீடிப்பு வழங்காதே: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று மாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா. மனித உரிமை பேரவையினால் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரினை தேடியறியும் சங்கம் 22 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான ஊணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடத்தி வரும் நிலையில் தமது போராட்டக்களத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரினை வட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா நேரில் சென்று கலந்துரையாடியிருந்தார்.

Related posts

Top