பச்சைத் துரோகமிழைக்கும் புலம் பெயர் அமைப்புகளை அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.(காணொளி இணைப்பு)

தமிழர்களின் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு பச்சைத் துரோகமிழைக்கும் துரோகிகளை தமிழர்கள் இனம் கண்டு அரசியல் மேடையிலிருந்து நிராகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மிக நெருங்கிய உறவைப் பேணுகின்ற புலம் பெயர்ந்த அமைப்புகள் எங்களுடைய தாயகத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கும், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பச்சைத் துரோகமிழைக்கின்றனர் என்பதை நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

Posted by Eeladhesam News on Samstag, 18. März 2017

உலகத் தமிழர் பேரவை( Global Tamil Forum)யில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அமைப்புகளும் கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரன் சொல்கிற கருத்துக்கு இணங்கி இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் Global Tamil Forum இல் இருக்கக் கூடிய கனேடியன் தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், USTPAC போன்ற அமைப்புகள் எங்கள் மக்களுக்கு இந்த அரசியல் மோசடியை சுமந்திரன் போன்றவர்களோடு இணைந்து செய்யப் போகிறார்கள் என்றால் நாங்கள் அவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். இன்னும் சொல்வதற்கு ஆகக் குறைந்தது இரண்டு அமைப்புகள் இருக்கிறது. அந்தந்த நாடுகளில் உள்ள எங்களுடைய மக்களுக்கு உண்மையான நிலைமையினை நாங்கள் பேரைச் சொல்லி குறிப்பிடுவோம்.

இதுவரை நாங்கள் தனிநபர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் இனி நாங்கள் பேரைச் சொல்லி குறிப்பிடுவோம்.

– ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Related posts

Top