போர்க்குற்ற விசாரணை உடனடியாகச் சாத்தியப்படாதாம் – சுமந்திரன்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றப் பொறிமுறையை உடனடியாக அமைக்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஐநா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இழுத்தடிப்புத் தொடர்பாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவின் அரசியலமைப்பின்படி போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபகளை நியமிப்பதற்கு எந்தவித தடங்கலும் ஏற்படப்போவதில்லையெனவும், சிறீலங்காவின் அரசியமைப்பிலே எப்படியான ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படவேண்டுமென்ற எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

மைத்திரி, ரணில் அரசாங்கம் சர்வதேசத்தில் ஒரு ஒப்பந்தந்தைச் செய்துவிட்டு ஏமாற்றமுடியாது எனவும், அவ்வாறு அவர்கள் ஏமாற்றினால் மகிந்த அரசாங்கத்திற்கு நடந்த நிலமையே ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top