பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வாள்வெட்டு குழுவினர், யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ள நிலையில், குறித்த மூவரும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக, பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்ட போதும், இவர்கள் குறித்த மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட மறுத்துவிட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் மற்றும் கொட்டகேனா பொலிஸார் இணைந்து நடத்திய திடீர் சோதனையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்களான தனஞ்சயன், பாரத் மற்றும் விக்ரம் என்ற மூவரும் கொட்டகேனா பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top