சிறிலங்கா குறித்த தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.

இந்த தீர்மான வரைவை, அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 13ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தன.

அத்துடன் சிறிலங்காவும் இதற்கு இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்திருந்தது.

அதேவேளை, இந்த வரைவுக்கு ஏனைய நாடுகளையும் ஆதரவு அளிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது.

இந்த நிலையில், தீர்மான வரைவுக்கு ஆதரவு அளிப்பதாக, அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், நோர்வே, ஆகிய நாடுகள் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளன.

மேலும் பல நாடுகள் இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மான வரைவு வரும் 23ஆம் நாள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
Tagged with: அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ

Related posts

Top