கிழக்கு மாகாணத்தில் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 104 பட்டதாரிகளுக்க ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் அன்வர் றம்ழான் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ஜி.தெய்வேந்திரம், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Top