மக்கள் போராட்டத்தை நிறுத்தச் சொல்லமாட்டேன்: கேப்பாபிலவில் முதலமைச்சர் விக்கி.

கேப்பாபிலவில் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது என்றும் அதனை எச்சந்தர்ப்பத்திலும் நிறுத்தச் சொல்ல மாட்டேன் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும். எனவே தொடர்ந்தும் மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு இராணுவத்தை வெளியேற்றும் எண்ணம் இல்லை. இதனால் போராட்டத்தின் மூலமே காணிகளைப் பெற முடியும். மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அனைத்து தரப்பினருடனும் இது குறித்து பேசுவேன்.

அத்துடன் இலங்கை விமானப்படையினர் மேலும் இரண்டாயிரம் ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக கிடைத்த தகவல்களை நான் அரசுக்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Top