வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் இருந்து மொனராகலவுக்கு செல்வதற்காக வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு வருகை தந்த நபர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Top