காமெடி பீஸ் தீபா அணியில் இருந்து 300 பேர் விலகல் : ஓபிஎஸ் பக்கம் தாவல்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் எண்ட்ரி ஆரம்பத்தில் அமர்க்களமாக இருந்தாலும், தற்போது அவரது நடவடிக்கையின் காரணமாக அலங்கோளமாகியுள்ளது.

இதற்கிடையில், தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவையில் இந்து விலகியதுடன், தனியாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தது, கலக்கல் காமெடியாக உள்ளது என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இதையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீபா ஆரம்பித்த பேரவையை கலைத்துள்ள நிர்வாகிகள், ஓபிஎஸ் அணியில் சேர்ந்து வருவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்த நிலையில், நேற்று சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள தீபா பேரவையில் இருந்து 300 பேர் விலகி, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இதுபோல பல பகுதிகளில் இருந்தும் தீபா பேரவையில் இருக்கும் மக்கள், ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருவதால், விரைவில் தீபா பேரவை ஒட்டுமொத்தமாக காலியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

Top