ஒரு வருடமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா தற்கொலை செய்து கொண்ட சிறுமி

கேரளாவில் பத்து வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த அவர் தாத்தாவின் செயலால் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் குண்டாராவை சேர்ந்தவர் விக்டர் டேனியல் . இவர் தனது மனைவி, மருமகள் மற்றும் பத்து வயதான பேத்தியுடன் வசித்து வருகிறார்.

விக்டரின் மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். விக்டர் அங்குள்ள ஒரு லாட்ஜில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது சொந்த பேத்தியான 10 வயது சிறுமியை விக்டர் கடந்த ஒருவருடமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்

இதனிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறுமி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து விஷயம் வெளியில் தெரியவர விக்டர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், விக்டர் வேலை செய்யும் லாட்ஜிலும் இது போன்ற பாலியல் செயலில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Top