ஈழ தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் இந்தியா அழுத்தம் தர அதிமுக எம்.பி மைத்ரேயன் வலியுறுத்தல்

இலங்கை ஈழ தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த இந்தியா அழுத்தம் தர வேண்டும் என அதிமுக எம்பி மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், ஜெனிவாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். பிரதமர் மோடி தனது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கேட்டு கொண்டார்

இதனை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். 2009ம் ஆண்டே போர் நிறைவு பெற்ற பின்னரும் இதுவரை இந்தியா சரியான நிலைப்பாட்டை எடுக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related posts

Top