ஐ.நா. ஆணையாளரின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்க வேண்டியதில்லை- ரணில்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் ஒரு சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிகின்றபோதும், சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரகெட்டிய வலஸ்முல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

‘குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் பங்களிப்பு எமக்கு அசியமில்லை. அவ்வாறான தலையீட்டினை நாம் விரும்பவும் இல்லை. எனவே இது குறித்து நாம் எந்தவொரு வெளித்தரப்பினரையும் உள்வாங்கப் போவதில்லை’ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top