காலஅட்டவணையுடன் சிறிலங்காவுக்கு காலநீடிப்பு வழங்கப்பட வேண்டும் : அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு !

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாசத்தினை வெறுமன கொடுத்துவிட முடியாது என போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Steven J Rapp அவர்கள் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தான் ஒத்துக் கொண்ட எந்தவொரு விடயங்களை முறையாக சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள Steven J Rapp அவர்கள், காலஅவகாசம் என்பது ஒத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் செய்து முடிப்பதற்கான காலஅட்டவணையுடன் வழங்கப்பட வேண்டும் எனவும் வலிறுத்தியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களுக்கும், Steven J Rapp அவர்களுக்கான சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஓபாமா நிர்வாகத்தில் க்கான போர்குற்ற விவகாரங்களுக்கான தூதுவராக Steven J Rapp அவர்கள் இருந்துள்ளதோடு, இலங்கைத்தீவுக்கு பயணம் செய்து, களநிலைமைகளை ஓபாமா நிர்வாகத்துக்கு அறிக்கையாக சமர்பித்திருந்தவர்.

தற்போது ஐ.நா பொதுசெயலர்களான கோபி அனான், பங்கி மூன் ஆகியோர் பங்காற்றுகின்ற நீதிமன்றத்திலும் நீதியாளராகவும் உள்ளார்.

கடந்த வாரம் ஜெனீவாவுக்கு விஜயம் செய்த போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்த போதே மேற்குறித்த கருத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைத்தீவின் நடந்தேறிய போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள Steven J Rapp அவர்கள், நடந்ததன் உண்மைகள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு ஏதோவொரு வகையில் ஈடுசெய் நிராவரணம் வழங்கப்பட வேண்டும்.

நடந்தவற்றுக்கான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை மிக அவசியாமானது. சிறிலங்காவில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குற்றமிழைத்தவர்களே, சாட்சியங்களை பாதுகாப்பார்கள் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

இந்நிலையில், இவ்விகாரத்தில் கலப்புநீதிமன்றம் போன்ற அனைத்துலக பொறிமுறையொன்று சிறிலங்கா விவகாரத்தில் அவசியம் என்றே கருதுகின்றேன்.

மேலும் இரண்டு ஆண்கால நீடிப்பினை வழங்கி விட்டு, இரண்டாண்டுகளின் பின்னரும் அதன் முன்னேற்றங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்க முடியாது.

ஆகையால், சிறிலங்கா ஒத்துக் கொண்ட விடயங்கைள முறையாக நிறைவேற்றுதவற்கான காலஅளவுகளைக் கொண்ட, செயன்முறையுடன் இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைத் தீவுக்கான எனது பயணத்தின் போது, வட புலத்தில் அளவுக்கதிகமான சிறிலங்கா படையினரின் பிரசன்னத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், வர்த்தக நடவடிக்கை போன்ற பல்வேறு விடயங்களில் படையினர் ஈடுபட்டிருந்தனர்

எந்தவொரு அச்சறுத்தல்களும் அங்கு இல்லாத நிலையில், அதிகளவிலான படையினரின் பிரச்சனம் ஏன் அங்கு என்ற கேள்வி எழுகின்றது. Steven J Rapp அவர்கள் தெரிவித்திருந்தார்.

Top